PM Kisan:- 12வது தவணை வரும் தேதி இதுதான்!

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணைத் தொகை எப்போது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறித்த பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரதமர் கிசான் சம்மன் யோஜனாவின் பயனாளிகளுக்கு EKYC ஐ அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் பலனைப் பெறும் விவசாயிகள் இப்போது ஜூலை 31 ஆம் தேதிக்குள் eKYCஐப் புதுப்பிக்க வேண்டும்.

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் நலிவடைந்த விவசாயிகளின் நிதிச்சுமையைப் போக்க ஏதுவாக, மத்திய அரசு, 6000 ரூபாய் வழங்குகிறது. 

இதில் முதல் தவணை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் வழங்கப்படுகிறது.

 அதன்படி தற்போது விவசாயிகளின் கணக்கில் முதல் தவணை (11வது தவணை) மே 31ம் தேதி அனுப்பப்பட்டது.

தற்போது பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

 இந்த தவணைத்தொகை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

इसी प्रकार से पीएम किसान योजना की लेटेस्ट खबर प्राप्त करने के लिए निचे दी गयी लिंक पर क्लिक करें.